Grigny : கத்திக்குத்து தாக்குதல்!!

13 ஐப்பசி 2025 திங்கள் 20:05 | பார்வைகள் : 379
Grigny (Essonne) நகரில் இன்று ஒக்டோபர் 13, திங்கட்கிழமை காலை கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளியை பல்வேறு நபர்கள் இணைந்து தாக்கியுள்ளனர்.
அங்குள்ள Barbusse பல்பொருள் அங்காடியில் நிறைந்த மதுபோதையில் இரு நபர்கள் மதுபானம் வாங்க வந்துள்ளனர். பின்னர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும், அதில் ஒருவர் கூரான கத்தி ஒன்றின் மூலம் இரண்டாவது நபரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கழுத்தில் வெட்டப்பட்டு அவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலாளியை அங்காடியில் இருந்த பலர் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தி அவரை பிடித்துள்ளனர். அதன்போது அவர்களையும் ஆயுததாரி தாக்க முற்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.