முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கு ஐந்தாண்டு சிறை!

13 ஐப்பசி 2025 திங்கள் 21:05 | பார்வைகள் : 609
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட உள்ளார். அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Santé சிறைச்சாலையில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க உள்ளார், அவர் தனது ஜனாதிபதி தேர்தலின் போது (2007 ஆம் ஆண்டில்) லிபிய ஜனாதிபதியிடம் இருந்து பெரும்தொகை பணம் அறவிட்டிருந்தார். இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது தண்டனைக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் வரலாற்றில் ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி சிறைத்தண்டனைக்குட்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.