மீண்டும் ஜனாதிபதி மக்ரோனை நையாண்டி செய்த டிரம்ப்!!

13 ஐப்பசி 2025 திங்கள் 22:33 | பார்வைகள் : 527
காசா எதிர்காலத்தைப் பற்றிய சர்வதேச மாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை நையாண்டி செய்துள்ளார். அதேசமயம், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியின் தோற்றத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மேடையில் இல்லாததால் அவர் எங்கே? நான் நினைத்தேன் இம்மானுவேல் என்னுடைய பின்னால் இருப்பார்," எனவும் நம்பவே முடியவில்லை! இன்று நீங்கள் எதிரே காட்சியளிக்கவில்லை!" எனவும் கூறி சிரிப்பை ஏற்படுத்தி உள்ளார்.பின்னர், இருவரும் பழைய போலி “வீர கைபிடி”யை மீண்டும் செய்தனர், சுமார் 30 வினாடிகள் கைகுலுக்கி உள்ளனர்.
அதே மாநாட்டில், டிரம்ப் இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியின் தோற்றத்தைப் பற்றி “இவள் ஒரு அழகான பெண்” என அவர் தெரிவித்துள்ளார் – இது அரசியல் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்படாத கருத்து. மெலோனி அதற்குச் சிரிப்புடன் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, டிரம்ப் எமிரேட்ஸ் துணைத் தலைவர் மன்சூர் பின் சயீதை நகைச்சுவையாகப் பார்த்து “வரம்பில்லா பணம்” உள்ளவர் எனவும் விமர்சித்துள்ளார்.