Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேடப்பட்ட இஷார செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் நேபாளத்தில் கைது

இலங்கையில் தேடப்பட்ட இஷார செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் நேபாளத்தில் கைது

14 ஐப்பசி 2025 செவ்வாய் 12:59 | பார்வைகள் : 212


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஷார செவ்வந்தியுடன் சேர்த்து யாழ்ப்பாணத்தை தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி  இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று  பொலிஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (14) நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்