Paristamil Navigation Paristamil advert login

Yvelines : 10 பேர் கைது!!

Yvelines : 10 பேர் கைது!!

14 ஐப்பசி 2025 செவ்வாய் 19:22 | பார்வைகள் : 595


Yvelines மாவட்டத்தில் இடம்பெற்ற அதிரடி நடவடிக்கையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனையை திட்டமிட்டு ஒருங்கிணைந்த விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 13, நேற்று திங்கட்கிழமை காலை பெரும் குழுவாகச் சென்ற காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தேடுதல் மேற்கொண்டனர். அதன்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீண்டகாலமாக இல்-து-பிரான்சின் பல்வேறு நகரங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

கடந்த வருடம் ஆரம்பித்த விசாரணைகளை அடுத்து, அக்குழுவில் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட  Laurent Nuñez, நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நேரில் சென்று சந்தித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்