Paristamil Navigation Paristamil advert login

எமானுவல் மக்ரோன் அரசியல் அளவுகோலில் முதல் 50 இடங்களில் இருந்து வெளியேற்றம்!!

எமானுவல் மக்ரோன் அரசியல் அளவுகோலில் முதல் 50 இடங்களில் இருந்து வெளியேற்றம்!!

14 ஐப்பசி 2025 செவ்வாய் 23:36 | பார்வைகள் : 347


நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி எமானுவல் மக்ரோனின் மக்கள் ஈர்ப்பு வலு மேலும் குறைந்துள்ளது. Paris Match நடத்திய பிரெஞ்சு மக்களின் விருப்பமான 50 அரசியல்வாதிகள் பட்டியலில் இருந்து மக்ரோன் மக்கள் விருப்பப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டமை வரலாற்றில் முதன்முறையாகும்.

பதவியில் இருக்கும் ஜனாதிபதி முதல் முறையாக முதல் 50 இடங்களில் இல்லை

வரலாற்று பின்னணி:

பிரான்சுவா ஒல்லோந்தும் நிக்கோலா சார்கோசியும் 43வது இடத்திற்கு கீழே இறங்கியதில்லை

எமானுவல் மக்ரோனின் முன்னாள் பிரதமர் பிரோன்சுவா பய்ரூவும் 51வது இடத்தில் (21.9%)

பிற அரசியல்வாதிகளின் நிலை:

தற்போதைய பிரதமர் Sébastien Lecornu: 7 இடங்கள் வீழ்ச்சி

Marine Le Pen: 5 இடங்கள் வீழ்ச்சி

Jordan Bardella: 6 இடங்கள் வீழ்ச்சி

இடதுசாரிகளின் வளர்ச்சி:

Fabien Roussel (கம்யூனிஸ்ட் கட்சி): 18 இடங்கள் ஏற்றம்

Marine Tondelier (பசுமைக் கட்சி): 13 இடங்கள் ஏற்றம்

Olivier Faure (சோசலிச கட்சி): 10 இடங்கள் ஏற்றம்

இந்த வீழ்ச்சி, நடப்பு அரசியல் நெருக்கடியில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனின் அரசுக்கு எதிரான பொது மக்களின் அதிருப்தியை பிரதிபலிக்கிறது.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்