ஓய்வூதிய சீர்திருத்தம் - ஜனாதிபதித் தேர்தல் வரை ஒத்திவைப்பு!

15 ஐப்பசி 2025 புதன் 00:36 | பார்வைகள் : 334
பிரெஞ்சு பிரதமர் செபஸ்தியோன் லூக்கோர்னூ (Sébastien Lecornu) ஓய்வூதிய சீர்திருத்தத்தை 2028 ஜனவரி வரை நிறுத்தி வைப்பதாக, நேற்றைய பாராளுமன்ற உரையில் அறிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்:
ஓய்வூதிய வயது (64) மாற்றம் நிறுத்தி வைக்கப்படும்
பங்களிப்புக் காலம் (170 trimestres) மாற்றமின்றி இருக்கும்
2028 ஜனவரி வரை இந்த நடவடிக்கை நீடிக்கும்
நிதி விளைவு:
2026-ல் 400 மில்லியன் யூரோ செலவு
2027-ல் 1.8 பில்லியன் யூரோ செலவு
மேலும் திட்டங்கள்:
செபஸ்தியோன் லூக்கோர்னூ அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் "ஓய்வூதிய மாநாடு" ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார், அத்துடன் 2023 சீர்திருத்தம் "தேவையானதாயினும்" மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது என்பதையும் பிரதமர் அங்கீகரித்தார். CFDT தொழிற்சங்கத்தின் கோரிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. செபஸ்தியோன் லூக்கோர்னூ "தேவையான சமூக சீர்திருத்தம் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு நியாயமானதாக இருக்க வேண்டும்" எனவும் தனது உரையில் வலியுறுத்தினார்.