14 வயதிலேயே துணைக் கேப்டனாகும் வைபவ் சூர்யவன்ஷி

15 ஐப்பசி 2025 புதன் 07:36 | பார்வைகள் : 128
இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துணைக் கேப்டனாக பீகார் அணிக்கு செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சதம் விளாசி சாதனை படைத்தவர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi).
அதனைத் தொடர்ந்து U-19 இந்திய அணியில் இடம்பிடித்து அதிரடியாக ஓட்டங்களை குவித்து வருகிறார்.
தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தின் மூலம் தற்போது 14 வயதிலேயே சூர்யவன்ஷி துணைக் கேப்டன் ஆகியுள்ளார்.
நாளை முதல் பல்வேறு நகரங்களில் ரஞ்சிக்கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணிக்கு துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார். சஹிபுல் கனி (Sakibul Gani) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னாவில் நடைபெற உள்ள போட்டியில் பீகார் அணி அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொள்கிறது.
வைபவ் சூர்யவன்ஷி, 2023024 சீசனில் தனது 12 வயதில் ரஞ்சிக்கிண்ணத் தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.