Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு உண்மையா? புதிய முதலீடுகள் விவாதிக்கவில்லை: பாக்ஸ்கான்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு உண்மையா? புதிய முதலீடுகள் விவாதிக்கவில்லை: பாக்ஸ்கான்

16 ஐப்பசி 2025 வியாழன் 08:35 | பார்வைகள் : 105


பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ. நேற்றுமுன்தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது' என, அமைச்சர் ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பாக்ஸ் கான் தரப்பில், 'புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த, பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய தலைவர் ராபர்ட் வூ, சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா ஆகி யோரை சந்தித்து பேசினார். அதன்பின், 'பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடுகளையும், 14,000 வேலை வாய்ப்பையும் உறுதி செய்கிறது' என, அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

இதற்கு பாக்ஸ்கான் தரப்பில் கேட்ட போது, 'பாக்ஸ்கானின் புதிதாக நியமிக்கப்பட்ட, இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ, முதல் வரை சந்தித்தபோது, புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப் படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், பாக்ஸ் கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக, சில மாதங்களுக்கு முன் உறுதி அளித்தது. பல மாநிலங்களும் தங்களை தொடர்பு கொண்டு முதலீடு செய்ய வலியுறுத்துவதால், இந்த விபரத்தை, வெளியில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது.

அதன் அடிப்படையில், பாக்ஸ்கான் முதலீடு குறித்து ரகசியம் காக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவ னத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி, முதல்வரை சந்தித்த நிலையில், பாக்ஸ்கானில், 15,000 கோடி ரூபாய் முதலீடு குறித்து அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாக்ஸ்கான் தரப்பில், 'முதல்வர் சந்திப்பின் போது, புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்பட வில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், தமிழகத்தில், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்வது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் வெளியிட்ட அறிக்கையில், 'எதற்காக இப்படிப் பட்ட தவறான பதிவை, தொழில் துறை அமைச்ச ரும், முதல்வரும் செய்த னர் என்று புரியவில்லை. மக்களை திசை திருப்பி இல்லாத ஒன்றை இருப்ப தாகவும், நடக்காத ஒன்றை முதல் நடந்ததாகவும் வர், அமைச்சர் அதிகாரப் பூர்வமாக பதிவிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது. இதேபோன்று தான் மற்ற முதலீடுகள் குறித்தும் அரசு கூறி வருகிறதா' என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்