கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி-விசாரணகைள் ஆரம்பம்

16 ஐப்பசி 2025 வியாழன் 05:40 | பார்வைகள் : 101
கனடாவின் நொவா ஸ்கோஷியாவின் ஈஸ்டர்ன் பாஸேஜ் (Eastern Passage) பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சமப்வம் தொடர்பில் தீவிர விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீடர் லேன் (Cedar Lane) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாக்குதல் சம்பவம் ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற அதிகாரிகள் கையில் கத்தி வைத்திருந்த ஒரு பெண்ணை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
“அந்த பெண் போலீஸ் உத்தரவின்படி கத்தியை கீழே விட மறுத்தார்,” என புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முதலில் டேசர் (Taser) கருவியைப் பயன்படுத்தியதாகவும், ஆனால் பெண் தொடர்ந்து கத்தியுடன் பொலிஸ் அதிகாரியை நோக்கி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒருவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடமான சீடர் லேனில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.