இளம் காவல்துறை வீரர் தற்கொலை!

15 ஐப்பசி 2025 புதன் 19:31 | பார்வைகள் : 373
இளம் காவல்துறை வீரர் ஒருவர் சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Lille (Nord) நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் 30 வயதுடைய குறித்த வீரர், அவரது வீட்டில் வைத்து சேவைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்தார். நேற்று செவாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது நண்பர்கள் சந்தேகம் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், அதை அடுத்தே அவர் தற்கொலை செய்துகொண்டமை தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்தில் இடம்பெறும் 16 ஆவது காவல்துறை வீரரின் தற்கொலை இதுவாகும். தேசிய காவல்துறையினர் மறைந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.