புதிய வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

16 ஐப்பசி 2025 வியாழன் 11:46 | பார்வைகள் : 115
உலகக்கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கிறிஸ்டியானோ படைத்தார்.
போர்த்துக்கல் மற்றும் ஹங்கேரி அணிகளுக்கு இடையிலான 2026 உலகக்கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 22 மற்றும் 45+3வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
இதன்மூலம் உலகக்கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
இதற்கு முன் கவுதமாலாவின் கார்லோஸ் ரூய்ஸ் (Carlos Ruiz) 39 கோல்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
பிபா உலகக்கிண்ணத் தகுதிச்சுற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ - 41 கோல்கள்
கார்லோஸ் ரூய்ஸ் - 39 கோல்கள்
லியோனல் மெஸ்ஸி - 36 கோல்கள்
அலி டேய் - 35 கோல்கள்
ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி - 32 கோல்கள்