Paristamil Navigation Paristamil advert login

சிகிச்சைக்காக இந்தியா சென்ற கென்யா முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்

சிகிச்சைக்காக இந்தியா சென்ற கென்யா முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்

16 ஐப்பசி 2025 வியாழன் 12:46 | பார்வைகள் : 209


கென்யாவின் முன்னாள் பிரதமர் சிகிச்சைக்காக இந்தியாவின் கேரளா மாநிலத்துக்குச் சென்றிருந்த நிலையில், மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

கென்யாவின் முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான Raila Odinga, கண் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார்.

ஆறு நாட்களாக அவர் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, புதன்கிழமை காலை வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது திடீரென Odingaவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Odinga உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Odinga, 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, கென்யாவின் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed உட்பட உலகத்தலைவர்கள் பலரும் Odingaவின் மறைவுக்கு இரங்கல் செய்திகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்