தீபாவளி பலகாரம்... அதிரசம்

16 ஐப்பசி 2025 வியாழன் 13:26 | பார்வைகள் : 116
தீபாவளி வருது என்றாலே நம் மனசுல முதல்ல நினைவுக்கு வர்றது அதிரசம் தான். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு பலகாரம் ரெடி பண்ணி அடுக்கும் போது அதிரசம் கண்டிப்பா இடம் பிடிக்கும். இந்த பாரம்பரிய இனிப்பு வகையான அதிரசம் சுவையிலும், மணத்திலும் ஒரு தனி அடையாளத்துடன் விளங்குகிறது.
அதிரசம் தயாரிக்க முக்கியமான பொருட்கள் பச்சரிசி மாவு, வெல்லம், நெய், எண்ணெய். முதல்ல பச்சரிசியை அரை நாள் ஊறவைத்து, நன்கு வடித்து இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அச்சு வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து பாகு (கம்பி பதம்) காய்ச்சணும்.
அந்த பாகில் அரிசி மாவை சேர்த்து, மாவு கட்டிப்படாத அளவிற்கு கலக்க வேண்டும். அப்புறம் அதனை நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் மாற்ற வேண்டும் பிறகு அந்த கலவையை மூன்று நாட்கள் துனி கட்டி மூடி வைக்கணும் அதுதான் அதிரசத்துக்கு வரும் அந்த மென்மையும், மொத்தத்தையும் தரும் ரகசியம். மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு உருண்டைகளா எடுத்து தட்டிவைத்து எண்ணெயில் நடுத்தர சூட்டில் பொரிக்கணும்.
பொரிக்கும் போது தீ அதிகமா இருந்தா அதிரசம் கரிஞ்சுரும், குறைவா இருந்தா எண்ணெய் குடிச்சுரும். எனவே சரியான சூட்டில் பொன்னிறமா வரும் வரை பொரிக்கணும். பொரிந்ததும் மேலே ஒரு சிறு தட்டில் வைத்து மேலிருக்கும் எண்ணெயை அழுத்தி நீக்கணும்.
சிறிது நேரம் ஆறியதும் சுவையான அதிரசம் ரெடி. சிலர் அதிரசத்திற்கு மாவு ரெடி செய்த உடனே எண்ணெய்யில் பொறித்து எடுத்து விடுவர். ஆனால் அதிரச மாவை இப்படி ரெடி செய்து 3 நாட்கள் வரை வைத்து பின்னர் பொறித்து எடுக்கும் போது உள்ளே உள்ள மாவின் சுவை அற்புதமாக இருக்கும்.