Paristamil Navigation Paristamil advert login

குஜராத்தில் அமைச்சராக பதவி ஏற்ற CSK வீரரின் மனைவி

குஜராத்தில் அமைச்சராக பதவி ஏற்ற CSK வீரரின் மனைவி

17 ஐப்பசி 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 111


ரிபாவா ஜடேஜா குஜராத் மாநில அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 2022 ஆம் சட்டமன்ற தேர்தலில், பாஜக மொத்தமுள்ள 182 இடங்களில், 164 இடங்களில் வெற்றி பெற்றது.

பூபேந்திரபாய் படேல் 2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில், 8 கேபினட் அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் இருந்தனர்.

குஜராத் அமைச்சரவையை 27 அமைச்சர்கள் வரை விரிவாக்க வாய்ப்புள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து மற்ற 16 அமைச்சர்களும் நேற்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், 17-10-2025 காலை 26 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா ஜடேஜாவும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

ரிபாவா ஜடேஜா, ஜாம் நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது வரை இலாகா ஒதுக்கப்படவில்லை.  

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.      

 

வர்த்தக‌ விளம்பரங்கள்