Paristamil Navigation Paristamil advert login

மட்டன் வடை..

மட்டன் வடை..

17 ஐப்பசி 2025 வெள்ளி 16:32 | பார்வைகள் : 135


மாலைப்பொழுதில் டீ குடித்தால் நன்றாக இருக்கும். அதோடு சேர்த்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் கூடுதலாக சிறப்பாக இருக்கும். அப்படி வீட்டில் செய்யக்கூடிய ருசியான மட்டன் வடை ஸ்னாக்ஸ் குறித்து பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்களாக முட்டை 2, பிரட் தூள் 5 ஸ்பூன், பெரிய வெங்காயம் 2, கொத்தமல்லித் தழை சிறிதளவு, எலுமிச்சைச் சாறு 1 ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 ஸ்பூன், பட்டை, கிராம்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்

செய்முறை: கொத்துக்கறியில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிதளவு தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு வாணலியில் நன்றாக வதக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்க வேண்டும். பட்டை, கிராம்பை தூளாக்க வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தழை, உருளைக்கிழங்கு, பட்டை, கிராம்புத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

இதில் வதக்கிய கொத்துக்கறியை நன்றாக கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்க்க வேண்டும். இத்துடன் கொத்துக்கறி கலவையை முக்கி பிரட் தூளில் பிரட்ட வேண்டும். இதை வடை போல தட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மட்டன் வடை ரெடியாகிவிடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்