Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா ?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா ?

17 ஐப்பசி 2025 வெள்ளி 16:32 | பார்வைகள் : 587


குழந்தைகளுக்கு, குறிப்பாச் சிறுவர்களுக்கு, இருமல் மருந்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மழைக் காலத்தில் சளி, இருமல் ஏற்படுவது இயல்பே. ஆனால், இதற்காக உடனடியாக மருந்துகளை நாட வேண்டியதில்லை. பெரும்பாலான இருமல் மருந்துகளில் உள்ள ரசாயனங்கள் இருமலுக்கு முழுமையான தீர்வை கொடுப்பதில்லை. மாறாக, சில சமயங்களில் அவை மார்பு வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் கடைகளில் சுயமாக மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பது தவறான அணுகுமுறை. பெரும்பாலான நேரங்களில், இந்த மருந்துகள் இல்லாமலேயே குழந்தைகள் இயற்கையாக உடல்நலம் தேறிவிடுவார்கள்.

எனவே, இருமல் பிரச்சினைகளுக்கு சிறு குழந்தைகளுக்கு மருந்துகளை தவிர்ப்பதே சிறந்தது என்றும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்