ரஷ்ய - உக்ரேன் போர்: ட்ரம்ப் - புட்டின் உரையாடல்

17 ஐப்பசி 2025 வெள்ளி 18:46 | பார்வைகள் : 293
உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்புகொண்டுபேசியுள்ளார்.
17.10.2025 நடைபெறவுள்ள உக்ரேன் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாக முக்கியத்துவம்பெறுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேசியது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "நான் இப்போது ஜனாதிபதி புட்டினுடன் பேசி வருகிறேன். இந்த நீண்ட உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதன் உள்ளடக்கங்களை நான் விரைவில் தெரிவிப்பேன், புட்டினும் இது குறித்து தெரிவிப்பார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Zelensky) (ஒக்டோபர் 17, 2025) வொசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது உக்ரேனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தப் போரால் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் ரஷ்யா பல ஏவுகணைகளையும், 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் பல்வேறு இலக்குகளை நோக்கி ஏவியுள்ளது. இந்தத் தாக்குதல்களில், அதிக அளவில் பொதுமக்களுக்கும் உட்கட்டமைப்புகளும் சேதடைந்துள்ளன. குளிர் காலம் தொடங்கவிருக்கும் வேளையில், உக்ரேனின் வாயு விநியோக வலையமைப்புக்கு (gas supply network) மேலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.