Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

ஜப்பானுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

17 ஐப்பசி 2025 வெள்ளி 18:46 | பார்வைகள் : 329


ஜப்பான் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது.

உக்ரைனில் நடக்கும் போருக்கு இடையே ரஷ்யாவின் வருவாயை தொடர்ந்து அதிகரிக்கும் நாடுகள் மீது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ட்ரம்ப் அரசு தற்போது ஜப்பான் மீதும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுவையே பெரிதும் சார்ந்துள்ள ஜப்பான், 2023யில் 582 பில்லியன் யென் ரஷ்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய செலவிட்டது.

2023ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்திய ஜப்பான், ஜோ பைடன் ஆட்சியில் சிறப்பு அனுமதி விலக்கு பெற்றது. அது சகலின்-2 திட்டத்தில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது.

தற்போதைய ட்ரம்ப் அரசு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்துமாறு ஜப்பானுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) தனது பதிவில், "அமெரிக்க-ஜப்பான் பொருளாதார உறவு தொடர்பான முக்கியமான பிரச்சனைகள் மற்றும் ஜப்பான் ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை நிறுத்தும் என்ற (வெள்ளை மாளிகை) நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு" குறித்து ஜப்பானின் நிதியமைச்சர் கட்சுனோபு கட்டோவிடம் விவாவித்ததாக எழுதினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்