€150,000 மதிப்புள்ள BMW, ஆனால் எம்பாப்பே ஓட்ட முடியாது!

17 ஐப்பசி 2025 வெள்ளி 22:13 | பார்வைகள் : 893
2021 முதல், ரியல் மாட்ரிட் வீரர்கள் ஒவ்வொரு சீசனின் தொடக்கத்திலும் BMW நிறுவனத்திடமிருந்து சொகுசு கார்களை பரிசாக பெறுகிறார்கள்.
இந்த வருடம் கிலியன் எம்பாப்பே சுமார் €150,000 மதிப்புள்ள மின்சார BMW i7 xDrive60 காரை தேர்ந்தெடுத்தாலும், அவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறவில்லை என்பதால் அதை ஓட்ட முடியாது. பாதுகாப்பு மற்றும் நேரமின்மையால் அவர் இதுவரை ஓட்டுநர் உரிமம் தேர்வு எழுதவில்லை என்றும், தனி டிரைவர் இருப்பதால் ஓட்ட தேவையே இல்லை என்றும் கூறப்படுகிறது.
அவரது தாயார் பாய்ஸா லாமாரி, அவரை பர்மீ பெற ஊக்குவித்து வருகிறார். பர்மீ இல்லையென்றாலும், எம்பாப்பேவிடம் Ferrari 488 Pista போன்ற சொகுசு கார்கள் உள்ளன. அவரைப் போலவே, ஜூட் பெல்லிங்கமும் பர்மீ இல்லாமல் கார் வாங்கியுள்ளார். காயம் காரணமாக கடந்த அரையிறுதி போட்டிகளில் விளையாடாத எம்பாப்பே, இந்த ஞாயிறு அல்லது அடுத்த புதன்கிழமையிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.