Saint-Denis : பெண் காவல்துறை வீரருக்கு விரல் வெட்டு!!

18 ஐப்பசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 784
நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட பெண் காவல்துறைவீரர் ஒருவருக்கு விரல் வெட்டப்பட்டு துண்டாக்கப்பட்டுள்ளது.
Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஒக்டோபர் 15, புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. Rue Saint-Clément வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து காலை 7 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்குள்ள வீடொன்றில் சத்தம் எழுந்து, தொந்தரவு செய்ததாக தெரிவிக்கப்பட்டே அவர்கள் அழைக்கப்பட்டனர்.
அதன்போது, நடவடிக்கையில் பெண் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதன்போது எழுந்த மோதலில் பெண் காவல்துறை வீரருக்கு விரல் வெட்டப்பட்டுள்ளது. இதிப் விரல் துண்டாகியுள்ளது.
Cannes-Écluse (Seine-et-Marne) நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறை வீரரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.