பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

18 ஐப்பசி 2025 சனி 07:36 | பார்வைகள் : 237
பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய சாசனம் தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை எனக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு எதிராக திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காவல்துறையினரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. மேலும், இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.