சூடானில் வன்முறைக்கு துணைபோன குற்றச்சாட்டில் BNP Paribas வங்கிக்கு 20 மில்லியன் டொலர் அபராதம்!!

18 ஐப்பசி 2025 சனி 21:31 | பார்வைகள் : 669
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஒரு நீதிமன்றம், பிரான்சின் BNP Paribas வங்கியை சூடானில் நடந்த மனித உரிமை மீறல்களில் துணைபோனதாகக் கண்டறிந்து, மொத்தம் 20.75 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
வங்கியால் நடைபெற்ற வணிக பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானம், 2019-ல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஓமர் அல்-பெஷீர் (Omar el-Béchir) தலைமையிலான ஆட்சி மற்றும் அதன் படைகள், மற்றும் போராளிகளுக்கு நிதியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. 1990-களின் இறுதியில் இருந்து 2009 வரை BNP Paribas சூடானில் செயல்பட்டது.
இந்த வழக்கை மூன்று சூடானிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதோடு, சொத்துக்களும் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு BNP Paribas வங்கி எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.