Paristamil Navigation Paristamil advert login

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவது தடை

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவது தடை

19 ஐப்பசி 2025 ஞாயிறு 09:20 | பார்வைகள் : 237


பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு லிஸ்பன் போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பர்கா, நிகாப் (Burqa, Niqab) என அழைக்கப்படும்.

இந்த புதிய சட்டத்தின் கீழ், பொதுச் இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தால் விதிக்கப்படும் அபராதம் 234- 4,671 அமெரிக்க டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, ஒருவரை இவ்வாறு முகத்தை மறைக்கும் ஆடைகளை அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

இருப்பினும் விமானங்கள் , இராஜதந்திர வளாகங்கள் போன்ற இடங்களில் இது போன்ற ஆடைகளை அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்