100 வயது வாழ ஆசையா?
12 ஆவணி 2020 புதன் 04:56 | பார்வைகள் : 10208
நொறுங்கத் தின்றால் நூறு வயது என பிரசித்திப் பெற்ற ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆனால் இன்றெல்லாம் நொறுங்க சாப்பிடக் கூட முடியாத அளவுக்கு உடல் நோய்கள் வாட்டுகின்றன. ஆம்..இப்போதெல்லாம் சிறுவயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் என வந்துவிடுவதால் நொறுங்க சாப்பிடவே முடியாத சூழலுக்குள் போய்விட்டோம்.
இந்நிலையில் 90 வயது முதியவர் ஒருவர் தன் உடல்நலனுக்கு காரணமான விசயங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதில் அவர், ‘’காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என வாழ்ந்தால் ஆயுள் கெட்டி என்கிறார். சித்தர் பாடல்களிலும் இது வருகிறது. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவை மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்தம், கபத்தை சமன் செய்யும் ஆற்றல் கொண்டது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி இதற்கும் பொருந்தும். அப்படியானால் அவற்றை எப்படி சாப்பிட வேண்டும்? இதோ இந்த கணக்கைப் பாருங்கள்.
இஞ்சியின் தோலில் நஞ்சுத்தன்மை உண்டு. அதனால் முதலில் அதை நீக்கிவிட வேண்டும். தினமும் காலையில் மூன்று டீஸ்பூன் இஞ்சிச்சாறு எடுத்து, சுத்தமான தேனை அதே அளவில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பித்தம் மாயமாகும்.
இதேபோ, சுக்கைப் பொறுத்தவரை அதன் மேல்பகுதியில் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பைப் பூசி, காய விடவேண்டும். பின்னர் மிதமான நெருப்பில் வாட்ட வேண்டும். சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் நேரம் எடுத்துவிட வேண்டும். தொடர்ந்து ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்டினால் சுக்கின் மேல் தோல் வந்துவிடும். மதியம் சாப்பிடுவதற்கு முன்னர், சுக்குத்தூளை அரை டீஸ்பூன் அளவுக்கு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாய்வு தொலை அகலும்.
கடுக்காயைப் பொறுத்தவரை அதன் உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட வேண்டும். தொடர்ந்து கடுக்காயை உடைத்து சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்க வேண்டும். அதன் கொட்டையில் நச்சுத்தன்மை இருக்கும். சதைப்பகுதியை இடித்து தூளாக்க வேண்டும். இரவில் தூங்கும்போது கடுக்காய் தூள் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
இந்த மூன்றையும் நீங்கள் தொடர்ந்து பாளோ செய்தாலே சதம் அடித்து விடலாம்