Paristamil Navigation Paristamil advert login

சுக்குநூறாக நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள்! தரைமட்டமாக்கிய ஒற்றை பந்துவீச்சாளர்

சுக்குநூறாக நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள்! தரைமட்டமாக்கிய ஒற்றை பந்துவீச்சாளர்

19 ஐப்பசி 2025 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 126


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாக்காவில் நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்காளதேசம் 49.4 ஓவர்களுக்கு 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

டௌஹித் ஹிரிடோய் 51 (90) ஓட்டங்களும், மஹிதுல் இஸ்லாம் அங்கோன் 46 (76) ஓட்டங்களும் எடுத்தனர். ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ரஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரேவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் ரிஷாத் ஹொசைன் (Rishad Hossain) பந்துவீச்சில் சரிந்தது.

39 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த மேற்கிந்திய தீவுகள் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பிரண்டன் கிங் 44 (60) ஓட்டங்கள் எடுத்தார். ரிஷாத் ஹொசைன் 6 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், தன்விர் இஸ்லாம் மற்றும் மஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்