அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியல்

19 ஐப்பசி 2025 ஞாயிறு 14:23 | பார்வைகள் : 134
இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் 10 வீரர்கள் குறித்த பட்டியலை இங்கே காண்போம்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 600க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்தான்.
தனது 16வது வயதிலேயே முதல் போட்டியில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 664 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி (Virat Kohli) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 551 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் 538 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் (Rahul Dravid) 509 போட்டிகளில் விளையிட்டியிருக்கிறார். இதில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று களமிறங்கிய ரோஹித் ஷர்மாவிற்கு (Rohit Sharma) 500வது சர்வதேச போட்டியாகும்.
அதிக போட்டிகளில் விளையாடியவர்கள்
சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகள்
விராட் கோஹ்லி - 551 போட்டிகள்
எம்.எஸ்.தோனி - 538 போட்டிகள்
ராகுல் டிராவிட் - 509 போட்டிகள்
ரோஹித் ஷர்மா - 500 போட்டிகள்
மொஹம்மது அசாருதீன் - 433 போட்டிகள்
சவுரவ் கங்குலி - 421 போட்டிகள்
அனில் கும்ப்ளே - 401 போட்டிகள்
யுவராஜ் சிங் - 399 போட்டிகள்
ஹர்பஜன் சிங் - 365 போட்டிகள்