முந்திரி கொத்து.

19 ஐப்பசி 2025 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 121
பண்டிகை காலங்களில் பாரம்பரிய பலகாரங்களை வீட்டில் செய்து ருசிக்க அதிக ஆர்வம் காட்டுவர். அப்படி ஒவ்வொரு மாவட்டத்தில் சில பலகார வகைகள் சிறப்பு பெற்றதாக விளங்கும். அப்படிப்பட்டதில் ஒன்று தான் கன்னியாகுமரி பேமஸ் முந்திரி கொத்து.
இந்த முந்திரி கொத்து செய்ய தேவையான பொருட்கள்: பச்சை பாசிப்பயறு, கருப்பட்டி அல்லது வெல்லம், அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் மற்றும் மஞ்சள் தூள்,பொரித்தெடுக்க தேங்காய் எண்ணெய்.
முந்திரி கொத்து செய்முறை: கடாயில் பச்சை பாசிப்பயறை நன்கு சிவக்கும் வரை வறுக்கவும். அதே கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பாசிப்பயறு மற்றும் தேங்காய் துருவலுடன் ஏலக்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதேநேரம் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும்.
பாசிப்பயறு - தேங்காய் கலவையுடன், அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த மாவில், காய்ச்சிய வெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி இல்லாமல் நன்கு
கலவையை சிறிய கொத்து வடிவத்தில் உருட்டவும்.
பின்னர் அந்த மாவு உருண்டையை மஞ்சள் மற்றும் அரிசி கலவையில் முக்கி கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி, உருட்டிய கொத்துகளை பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார்.