Paristamil Navigation Paristamil advert login

குடும்ப உதவித்தொகைகள் 14 வயதிலிருந்து 18 வயதிற்கு மாற்றம்!!

குடும்ப உதவித்தொகைகள் 14 வயதிலிருந்து 18 வயதிற்கு மாற்றம்!!

19 ஐப்பசி 2025 ஞாயிறு 20:40 | பார்வைகள் : 1321


அரசு, இரண்டாவது குழந்தையிலிருந்து வழங்கப்படும் குடும்பத் தொகையானது 14 வயதில் இருப்பதை18 வயதா உயர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. 

தற்போதைய திட்டத்தில், 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 20 வயது வரை மாதத்திற்கு €19 முதல் €75 வரை கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் 2026 மார்ச் மாதத்தில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இந்த மாற்றத்தால் வருடத்திற்கு €200 மில்லியன் வரை சேமிக்க முடியும் என கூறுகிறது. ஆனால், பெற்றோர்களும் குடும்ப அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர், ஏனெனில் 14 வயது இளையோர் மாதத்திற்கு €293 வரை கூடுதல் செலவுகளை ஏற்படுத்தக்கூடியவர்கள்.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், சிறிய மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரிய அளவில் நிதிநட்டம் அடைவார்கள். எடுத்துக்காட்டாக, இரண்டு 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பம் ஆண்டு ஒன்றுக்கு €906 வரை இழக்கலாம். மூன்று பெரிய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு €2,700க்கும் மேல் இழக்க வாய்ப்பு உள்ளது. 

இந்த திட்டம் பெற்றோருக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால், பலர் 14 வயதிலேயே கூடுதல் உதவித் தொகை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்