பிரிஜித் மக்ரோன் மீது அவதூறு! - நீதிமன்றத்துக்கு ஆதாரங்களை வழங்கும் மக்ரோன்!!

18 புரட்டாசி 2025 வியாழன் 13:03 | பார்வைகள் : 405
பிரிஜித் மக்ரோன் பெண்ணல்ல எனும் அவதூறு பல வருடங்களாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றம் பலருக்கு இதுவரை குற்றப்பணம் அறிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த விமர்சங்கள் குறைந்தபாடில்லை.
ஜனாதிபதி தம்பதிகள் இந்த குற்றச்சாட்டுக்கு ஒரு முடிவினை கொண்டுவர விரும்புகின்றனர். நீதிமன்றத்துக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கப்படுகிறது. பிரிஜித் மக்ரோன் பெண் என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தீவிர வலதுசாரி சமூக செயற்பாட்டாளரான Candace Owens, அண்மையில் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பிரிஜித் பிறக்கும் போது ஆணாக பிறந்தவர் எனவும், அவர் பின்னர் தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், மீதிமன்றமூடாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தம்பதிகளது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.