முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!!

18 புரட்டாசி 2025 வியாழன் 15:28 | பார்வைகள் : 730
செப்டம்பர் 18, இன்று வியாழக்கிழமை தொழிலாளர் ஆர்ப்பாட்டம் முழு மூச்சில் இடம்பெற்று வருகிறது. பரிசில் ஈஃபிள் கோபுரம் மற்றும் லூவர் அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.
ஈஃபிள்!
ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் (SETE) அறிவித்துள்ளது. இருந்தபோதும் அதன் தரை தளம் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் மீழ வழங்கப்படும் அல்லது திகதி மாற்றித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் வேலை நிறுத்தம்!
ஆசிரியர்களில் 17% சதவீதமானவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளில் 17.48% சதவீதமும்,
கல்லூரிகளில் 19.90% சதவீதமும்,
பொது மற்றும் தொழில்நுட்ப உயர்நிலை பாடசாலைகளில் 13.72% சதவீதமும்,
தொழிற்கல்வி நிலையங்களில் 13.08% சதவீதமும்
ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அருங்காட்சியங்கள்!
லூவர் அருங்காட்சியகம், Eugène Delacroix, Musée d'Orsay ஆகிய அருங்காட்சியங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
240,000!
இன்று பிற்பகல் வரை 240,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தமாக 439 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 243,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.