Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இருந்து சென்ற இந்திய அகதி, பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்..!!

பிரான்சில் இருந்து சென்ற இந்திய அகதி, பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்..!!

18 புரட்டாசி 2025 வியாழன் 16:28 | பார்வைகள் : 613


பிரான்ஸ் - பிரித்தானியா போட்டுக்கொண்ட ONE IN - ONE OUT ஒப்பந்தத்தின் முதலாவது நடவடிக்கை ஒன்று செப்டம்பர் 18, வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. முதலாவது அகதி இன்று பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இன்று காலை பிரித்தானியாவில் இருந்து பரிசுக்கு வந்த விமானத்தில் அகதி ஒருவர் அழைத்துவரப்பட்டார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும், அவர் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவுக்கு படகில் சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று திருப்பி அனுப்பப்பட்டதை பிரித்தானிய அமைச்சர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ONE IN - ONE OUT ஒப்பந்தம் என்பது சட்டவிரோத அகதிகள் பயணத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் பிரித்தானியா போட்டுக்கொண்ட ஒப்பந்தமாகும். எந்த வித குற்றச்செயல்களுடனும் தொடர்பில் இல்லாத, பிரித்தானியாவில் குடியேறுவதற்கு பொருத்தமான காரணங்களை கொண்ட அகதிகளை மட்டும் அனுமதித்துக்கொண்டு பெற்றுக்கொள்ள பிரித்தானியா முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரான்ஸ் தரப்பில் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்