ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

18 புரட்டாசி 2025 வியாழன் 18:52 | பார்வைகள் : 578
செப்டம்பர் 18, இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. நாடு முழுவதும் ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக CGT தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Paris, Rouen, Caen Marseille, Aix, Lyon, Nantes என பெரும் நகரங்கள் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. குறிப்பாக மார்செயில் 120,000 இற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பரிசில் 31 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் 181 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
10 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் 500,000 பேரும், தலைநகர் பரிசில் 55,000 பேரும் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
******
பிரெஞ்சு மருந்து சங்கங்களின் கூட்டமைப்பும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. அவர்கள் 20,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.