Paristamil Navigation Paristamil advert login

எதிர்காலத்திற்கான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் - சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர்

எதிர்காலத்திற்கான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் - சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர்

19 புரட்டாசி 2025 வெள்ளி 06:18 | பார்வைகள் : 109


உலகளாவிய நிர்வாகத்திற்கு வலுவான ஆதரவை வழங்குவதற்கும், மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு சமூகத்தை உருவாக்கவும் கூட்டாக உழைக்க வேண்டும் என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன், வலியுறுத்தியுள்ளார்.

 

12வது பீஜிங் சியாங்சான் மன்றத்தில் (Beijing Xiangshan Forum) கலந்துகொள்ள வந்திருந்த மலேசியா, கம்போடியா, மியான்மர், நமீபியா, ருவாண்டா மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறைத் தலைவர்களை சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் தனித்தனியாகச் சந்தித்தார்.

 

 

இந்த ஆண்டு நடைபெறும் சியாங்சான் மன்றம் வரலாற்று முக்கியத்துவமும், நடைமுறைச்சாத்தியம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

 

சீன இராணுவம் அனைத்து நாடுகளுடனும் தங்கள் நீண்டகால நட்புறவை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், இராணுவ தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், உயர்மட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக டோங் ஜுன் இதன்போது தெரிவித்தார்.

 

உலகளாவிய சவால்களையும், அபாயங்களையும் கூட்டாக எதிர்கொள்ளும் வகையில் இணைந்து செயல்பட சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் இதன்போது அழைப்பு விடுத்தார்.

 

 

இந்தச் சந்திப்புகளின்போது, அனைத்து நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் சீனாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

 

இந்த நிகழ்வு, உலக அரங்கில் சீனாவின் இராஜதந்திர மற்றும் இராணுவ செல்வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்