Paristamil Navigation Paristamil advert login

பாடசாலை அருகே கோடரியுடன் வந்த நபர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!!

பாடசாலை அருகே கோடரியுடன் வந்த நபர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!!

18 புரட்டாசி 2025 வியாழன் 21:22 | பார்வைகள் : 532


துலோன் அருகிலுள்ள La Seyne-sur-Mer பகுதியில், ஒரு பாடசாலை அருகே குழந்தைகளை தொந்தரவு செய்த 30 வயதுக்குமேல் ஒருவனை காவல் துறையினர் விரட்டியுள்ளனர். அந்த நபர் ஒரு தோட்டத்திற்குள் ஓடி, கோடரியுடன் காவல் துறையினரை தாக்க முயன்றார். காவல் துறையினர் முதலில் தடுப்புப் பிஸ்டல் (taser) பயன்படுத்தினர், பின்னர் அவரது கால்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின்னர் அவர் மருத்துவமனையில் காயங்களால் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் பாதுகாப்பு வட்டம் அமைக்கப்பட்டது. நகரின் மேயர் Jo Minniti மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர் Cheikh Mansour ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்