Paristamil Navigation Paristamil advert login

சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு

சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு

19 புரட்டாசி 2025 வெள்ளி 07:05 | பார்வைகள் : 124


கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: 8 ஆண்டுகளுக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பியை திருடன் என விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பாராட்டுகிறார். உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் சான்றிதழ் கொடுத்துள்ளார். பாஜ கட்சி தமிழக மக்கள் இதயத்தில் இடம் பெற்று கொண்டு இருக்கிறது. கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது.

ஊழல்வாதிகள்

சாராய அமைச்சராக 3 ஆண்டுகள் பணி செய்து, அவர் சம்பாதித்த பணத்தில் தான் இன்றைக்கு கரூரில் இத்தனை ஆண்டுகளாக இருக்க கூடிய திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது. இதனை விட அய்யோ பாவம் என்று சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் வைத்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தில் நடத்திய விழா மேடையில் ஏதோ சாதனை செய்தது போல் எங்களுக்கு எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறுகிறார்.

கண்ணாடியை பாருங்க

முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணாடியை பாருங்கள். எப்படிபட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்து இருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன் பிறகு பாஜவுக்கு அறிவுரை கொடுங்கள்.

இன்றைக்கு திமுகவுக்கு எடுபிடியாக தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். அந்த காங்கிரஸ் கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என்று மாற்றிவிடலாம். திமுகவுக்கு எடுபிடி வேலை செய்வதற்கு ஒரு கட்சி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சந்திப்பது எல்லோருக்குமே தெரியும். இபிஎஸ் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. அவர் முகத்தை மறைத்ததாக நான் பார்க்கவில்லை. புட்டேஜில் அப்படி தெரிந்திருக்கிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை பாஜ காப்பாற்றியதாக இபிஎஸ் கூறியது சரித்தர உண்மை. அந்த கருத்தை வரவேற்கிறேன். 2016-17ல் பாஜ என்ன செய்தது என்பதை இபிஎஸ் மக்கள் மன்றத்தில் கூறியுள்ளார்.

இளிச்சவாயன்

சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று கூறி இருப்பதை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும். விஜயின் சுற்றுப் பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோசம் தான். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமலும் விஜய் கூட்டம் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் நான் தான் இளிச்சவாயன். நான் எம்எல்ஏ கிடையாது. எம்பி கிடையாது. பஞ்சாயத்து தலைவர் கிடையாது.

நேர்மை

மக்களின் வரி பணத்தில் ஒரு ரூபாய் சம்பளம் கிடையாது. வருடம் வருடம் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவேன். என் சொந்த சம்பாத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது. சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய விவசாய நிலத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டி உள்ளது. நான் இன்றைக்கு ரூ.மூன்றரை கோடிக்கு கடனாளியாக இருக்கிறேன். அதனை யாரும் பேசவில்லை. வட்டியும் கட்டுகிறேன். நாங்கள் மட்டும் தான் எங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

காமராஜர் ஐயா நிரூபிக்க வேண்டும். அவரது கால் தூசிக்கு சமமான நானும் நிரூபிக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் யாரும் நிரூபிக்க மாட்டார்கள். இது தான் தமிழக அரசியலின் துரதிர்ஷ்டம். நாங்கள் நேர்மையாக இருப்பதால் யாரும் சொல்வதற்கு முன்பே இதயத்தை திறந்து காட்டுகிறோம். தமிழகத்தில் ஒரு நாள் வரும். அப்போது யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் திறந்த கண்ணாடியாக இருக்க வேண்டியிருக்கும்.

நட்பு தொடரும்

எனக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார். கட்சியின் சில நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். பாஜவின் பெருமைமிகு தொண்டனாக நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். டிடிவி தினகரனை ஓரிரு நாட்களில் நட்பின் அடிப்படையில் சந்திக்க இருக்கிறேன். பாஜ கஷ்டத்தில் இருந்த போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாக இருந்தவர்கள். அவர்களோடு அரசியலை தாண்டி என் நட்பு தொடரும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்