நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

19 புரட்டாசி 2025 வெள்ளி 14:05 | பார்வைகள் : 102
நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் காரத்தினால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி காட்டினார். வரி பதற்றத்திற்கு பிறகு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டது.
இந்தியா மீது தொடர் விமர்சனங்களை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். இந்த சூழலில், ''நம் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி, வரும் நவம்பர் மாதத்துக்குள் விலக்கிக் கொள்ளப்படலாம்'' என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பிரிட்டனில் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் புகழ்ந்து பேசினார். அப்போது அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பது எனக்கு நன்கு தெரியும். நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்திய பிரதமர் மோடிக்கும் மிகவும் நெருக்கமானவன். நான் அவரிடம் பேசினேன்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். எங்களுக்குள் மிக சிறந்த உறவு உள்ளது. மிக எளிமையாக சொன்னால் எண்ணெய் விலை குறைந்தால் புடின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்த போரிலிருந்து வெளியேறப் போகிறார். உக்ரைன் போரை தீர்ப்பது எளிதானது என நினைத்தேன். புடின் என்னை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.