Paristamil Navigation Paristamil advert login

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படம் எப்படி இருக்கு?

19 புரட்டாசி 2025 வெள்ளி 11:23 | பார்வைகள் : 152


நடிகர் விஜய் ஆண்டனி, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அவரது லேட்டஸ்ட் படம் சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. அருண் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் வாகை சந்திரசேகர், கண்ணன், ரியா ஜிது, ஷோபா விஸ்வநாத், பிரசாந்த் பார்த்தீபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேமண்ட் டெர்ரிக் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி தான் இசையமைத்து உள்ளார்.

இப்படம், அரசியல் ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டது. 1989-ல் கதை தொடங்குகிறது. பழங்குடிப் பெண் கொலை செய்யப்பட, போலீசார் விசாரணையை தொடங்குகின்றனர். அப்போது தொழிலதிபரின் அழுத்தம் வருகிறது. தொழிலதிபரின் அழுத்தத்தால் வழக்கு திசை மாறுகிறது. அந்தப் பெண்ணின் குழந்தை குப்பையில் வீசப்படுகிறது. அதன்பிறகு எண்ட்ரி ஆகும் ஹீரோ என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சக்தித் திருமகன் படத்தின் முதல் பாதியில் காட்டப்பட்டுள்ள ஸ்கேம் 2025 அருமை. சமீப காலங்களில் விஜய் ஆண்டனி தேர்வு செய்து நடித்த ஸ்ட்ராங் ஆன கண்டெண்ட் உள்ள படம் இது. பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சுவாரஸ்யமான அரசியல் த்ரில்லர். படம் கிரிஸ்ப் ஆகவும் வேகமாகவும் நகர்கிறது. இயக்குனர் அருண் பிரபு நன்கு ஆராய்ச்சி செய்து எடுத்துள்ளார் என்பது தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

சக்தித் திருமகன் படத்தின் முதல் பாதி வலுவாகவும், நம்மை கட்டிப்போடும் வகையில் உள்ளது. பல மாநில மற்றும் மத்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் ஆலோசகர்கள், அரசியல் யூடியூப் சேனல்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமை படத்தில் தெரிகிறது. இயக்குனர்

அருண் பிரபுவின் இதுவரையிலான அற்புதமான ஒர்க் இந்த படம் தான். இதுபோன்ற கதைக்காகவே அளவெடுத்து செய்யப்பட்ட நடிகர் விஜய் ஆண்டனி, அவர் வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார். படம் ரொம்பப் பிடிச்சிருக்கு என பாராட்டி உள்ளார்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத முதல் பாதி. விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு கூடுதல் பலம். ரைட்டிங் சிறப்பு என படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சக்தித் திருமகன் படத்தின் முதல் பாதி சூப்பர், அதைத் தொடர்ந்து வரும் இரண்டாம் பாதி படு மோசம், அது படத்தை முற்றிலுமாக நாசமாக்கி உள்ளது. விஜய் ஆண்டனிக்கு இரட்டை வேடத்தில் சூப்பர் ரோல், ஆனால் இயக்குனர் அருண்பிரபு இரண்டாம் பாதியில் வழக்கமான சலிப்பூட்டும் திரைக்கதையை பயன்படுத்தி குழப்பிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்