அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை

19 புரட்டாசி 2025 வெள்ளி 12:12 | பார்வைகள் : 157
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நீதிபதி ஜெப்ரி பெர்குசன் அவரது மனைவியை சுட்டுக்கொன்றதற்காக அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
74 வயதான ஜெப்ரி பெர்குசன் ஆரஞ்சு கவுண்டி நீதிபதியான இவர் தனது மனைவியிடம் கடந்த 2023-ம் ஆண்டு குடும்ப நிதியை கையாள்வது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெர்குசன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சரமாரியாக சுட்டார். இதில் படுகாயம் அடைந்த ஷெரில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து பெர்குசனை பொலிஸா கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து சுமார் 50 துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டதை பெர்குசன் ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.