10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

19 புரட்டாசி 2025 வெள்ளி 12:12 | பார்வைகள் : 210
10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜேர்மன் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் இறுதியில் ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை 3.55 மில்லியன் ஆக இருந்தது, அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்ததால் 3.50 மில்லியன் ஆக குறைந்துள்ளது.
இந்த அளவுக்கு ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான்.
இந்த எண்ணிக்கை குறைவுக்குக் காரணம், நாடுகடத்தல்கள், தாமாக வெளியேறியவர்கள் மட்டுமின்றி அந்த அகதிகளில் பலர் குடியுரிமை பெற்றதும் ஆகும்.
83,150 சிரியா நாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் அனைவரும் அகதிகள் அல்ல என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.