அகதிகள் குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்க - பொதுவாக்கெடுப்பு அவசியம்!!
.jpg)
19 புரட்டாசி 2025 வெள்ளி 15:35 | பார்வைகள் : 430
அகதிகள் தொடர்பில் சட்டங்களை நிறைவேற்றவும், முடிவுகளை எடுக்கவும் பொது வாக்கெடுப்பு மேற்கொள்ளவேண்டும் என பெருமளவிலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பத்தில் ஏழுக்கும் அதிகமானோர் இதே கருத்தை ஒருமித்து தெரிவித்துள்ளனர். அகதிகள் தொடர்பில் அரசு பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அவ்வப்போது மாற்றங்களையும் செய்து வருகிறது. அண்மையில் பிரித்தானியாவுடன் செய்துகொண்ட ONE IN - ONE OUT எனும் ஒப்பந்தமும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், CSA நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் இன்று செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியாகியிருந்தன. கருத்துக்கணிப்பில், “அகதிகள் தொடர்பில் முடிவுகளை எடுக்க பொது வாக்கெடுப்பு அவசியமா?” என கேள்வி எழுப்பட்டது.
72% சதவீதமானவர்கள் ஆம் எனவும்,
28% சதவீதமானவர்கள் இல்லை எனவும் பதிலளித்துள்ளனர்.
மேற்படி கருத்துக்கணிப்பு செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் 18 வயது நிரம்பிய 1,001 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.