FIFA கால்பந்து தரவரிசை - 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்பெயின் முதலிடம்

19 புரட்டாசி 2025 வெள்ளி 17:35 | பார்வைகள் : 117
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA, கால்பந்து அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், 2வது இடத்தில் இருந்த ஸ்பெயின், ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
முதலிடத்தில் இருந்த அர்ஜென்டினா அணி, 2 இடங்கள் பின்தங்கி 3வது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த மார்ச் 2023 முதல் அர்ஜென்டினா முதலிடத்தை தக்க வைத்திருந்தது.
3வது இடத்தில் இருந்த பிரான்ஸ் ஒரு இடம் முன்னேறி, 2வது இடத்திற்கு சென்றுள்ளது.
இங்கிலாந்து 4வது இடத்திலும், போர்ச்சுக்கல் 5வது இடத்திலும், பிரேசில் 6வது இடத்திலும் உள்ளன.
இந்தியா ஒரு இடம் பின்தங்கி 134வது இடத்திலும், இலங்கை 197வது இடத்திலும், பாகிஸ்தான் 199வது இடத்திலும் உள்ளது.