உலகின் அமைதியான அறை - ஆனால் ஒரு மணி நேரம் கூட உள்ளே இருக்க முடியாது

19 புரட்டாசி 2025 வெள்ளி 18:35 | பார்வைகள் : 114
உலகின் பெரும்பாலானோருக்கு அமைதியான இடத்தில் வசிக்க ஆசை இருக்கும். ஆனால் உலகின் அமைதியான அறையில், ஒரு மணி நேரம் கூட மனிதர்களால் இருக்க முடியாது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவின் ரெட்மாண்டில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு அனிகோயிக் சேம்பர்(Anechoic Chamber) என்ற அறையை உருவாக்கியது.
இந்த அறை உலகின் அமைதியான அறை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
6 அடுக்கு காங்கிரீட் மற்றும் இரும்புகளால் இந்த அறையின் சுவர் கட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒலி அலைகள் எதிரொலிப்பதைத் தடுக்க, சுவற்றின் உட்புறம், தரை மற்றும் மேல்பகுதியில் பைபர்கிளாஸ் பொருட்கள், ஒலி உறிஞ்சும் கூம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறையை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் தேவைப்பட்டது.

இந்த அறையில் இருக்கும் போது, மூச்சு விடுவது உடலில் ரத்தம் ஓடுவது போன்ற ஒலிகள் கூட அதிகளவில் கேட்கும். தலையை திருப்பும் ஓசை கூட கேட்கும். மேலும், காதுகளில் தொடர்ந்து ஒருவித ஒலி இருக்கும்.
இதன் காரணமாக மனிதர்களால் ஒருமணி நேரத்திற்கு மேலாக இந்த அறையில் இருக்க முடியாது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் சாதனங்களின் ஒலியின் தரத்தை சோதிக்க இந்த அனிகோயிக் சேம்பர் அறையை உருவாக்கியுள்ளது.