பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் ! ஸ்டாலின்

20 புரட்டாசி 2025 சனி 14:01 | பார்வைகள் : 105
வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என ஆழ்கடலில் ஆய்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பழந்தமிழர் வரலாறு குறித்து மயிலாடுதுறை அருகே பூம்புகாரில் கடலில் ஆய்வு, இந்திய கடல்சார் பல்கலை உதவியோடு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவினை மேற்கொள்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம். இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்.
அடுத்து நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும் என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.