Paristamil Navigation Paristamil advert login

முடிவுக்கு வருகிறது 2G மற்றும் 3G இணைய சேவைகள்!

முடிவுக்கு வருகிறது 2G மற்றும் 3G இணைய சேவைகள்!

20 புரட்டாசி 2025 சனி 13:13 | பார்வைகள் : 654


பிரான்சில் தற்போது சேவையில் இருக்கும் இணைய சேவைகளான  2G மற்றும் 3G ஆகிய மிக ‘மெதுவான’ இணையத்தை வழங்கும் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

இவ்வருட இறுதியோடு  2G சேவையும், 2028 ஆம் ஆண்டு இறுதியோடு 3G இணைய சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட உள்ளன.  Fédération des ascenseurs அமைத்து இத்தகவலை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் 5G வலையமைப்பை நாடு முழுவதும் விஸ்தரிக்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், கம்பி வழி இணையமாக அதிஉயர் வேகம் கொண்ட ‘பைபர்’ இணையமும் பாவனையில் உள்ளது.

இதனால் 2-3 G சேவைகளை படிப்படியாக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. பிரான்சில் 2.7 மில்லியன் மக்கள் 4G வசதிக்கும் கீழ் உள்ள தொலைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 2G மற்றும் 3G இணையம் பாவிப்போரின் எண்ணிக்கை 18% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்