சுகாதார காப்புறுதியில் 8 மில்லியன் மோசடி! - ஐவருக்குச் சிறை!!
.jpg)
20 புரட்டாசி 2025 சனி 15:12 | பார்வைகள் : 386
சுகாதார காப்பீட்டில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புடைய எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்ற 2024 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் முடிவில், இவ்வார திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களிலும் ஐவர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சுகாதார காப்பீட்டில் (l'Assurance Maladie) மோசடி செய்து 8 மில்லியன் யூரோக்களை சுருட்டியுள்ளனர்.
விசாரணைகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு தடுப்புக்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 280 நிறுவனங்களூடாக போலியான ஆவணங்கள் தயாரித்து மேற்படி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.