அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட லப்பர் பந்து இயக்குனர்

20 புரட்டாசி 2025 சனி 17:00 | பார்வைகள் : 179
லப்பர் பந்து படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தமிழரசன் பச்சைமுத்து. கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் லப்பர் பந்து திரைப்படமும் ஒன்று. அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, தேவதர்ஷினி ஆகியோரின் யதார்த்தமான நடிப்பில் ரிலீஸ் ஆன லப்பர் பந்து திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த படமாக மாறியது. அந்த அளவுக்கு அந்தக் கதையும், கதாபாத்திரங்களும் ஆத்மார்த்தமாக இருந்தன. அப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னரும் அதற்கு மற்ற மொழிகளில் இருந்தும் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, தன்னுடைய அடுத்த படம் யாருடன் என்கிற அப்டேட்டையும் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தன்னுடைய அடுத்தபட ஹீரோவின் பெயரையும் குறிப்பிட்டு அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
பர்ஸ்ட் ஷோ முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க. இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல, எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…ரொம்ப நன்றி. நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும். இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த அப்டேட்டை நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு, நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.