Paristamil Navigation Paristamil advert login

சுற்றி வளைத்த 619 ரஷ்ய ட்ரோன்கள்- 583 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

சுற்றி வளைத்த 619 ரஷ்ய ட்ரோன்கள்- 583 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

20 புரட்டாசி 2025 சனி 17:51 | பார்வைகள் : 197


உக்ரைன் மீது ரஷ்யா கிட்டத்தட்ட 619 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலாக  இரவு சுமார் 619 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 583 ட்ரோன்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதலில், 579 ஆளில்லா விமானங்கள், 8 இஸ்கந்தர்-M/KN-23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 32 KH -101 கப்பல் ஏவுகணைகள் உக்ரைனை நோக்கி ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலை முறியடிப்பதில் F-16 போர் விமானங்களின் பங்கு முக்கிய பங்கு வகித்ததாகவும் உக்ரைனிய தரவு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு தாக்குதலுக்கு பிறகு மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டாலும், உக்ரைனின். 10 வெவ்வேறு இடங்களில் மொத்தமாக 23 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும், டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்