Paristamil Navigation Paristamil advert login

ஆரோக்கியமான உடல் நலத்தை பெற உதவும் இஞ்சி சாறு !!

ஆரோக்கியமான உடல் நலத்தை பெற உதவும் இஞ்சி சாறு !!

1 தை 2021 வெள்ளி 07:30 | பார்வைகள் : 8922


 தேன் மற்றும் இஞ்சி சாறை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கும். ஏனெனில்,இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.

 
தேனுடன் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால் அழகையும், இளமையான தோற்றத்தையும் கொடுக்கும். தேன் மற்றும் புதினாவை இஞ்சி சாறுடன் வேகவைத்த தண்ணீரை குடித்து வந்தால் ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம்.
 
இந்த சாருடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் பித்தம் குறையும். இஞ்சி சாருடன் எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, தேன் சேர்த்து பருகுவதால் கொழுப்பு அளவு, இரத்த அழுத்தம் குறையும்.
 
இஞ்சி சாறுடன் சிறிது கொத்தமல்லி அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பசியின்மையிலிருந்து விடுபடலாம். இஞ்சி சாறை எடுத்து அதனுடன்  வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாத நோயிலிருந்து விடுபடலாம்.
 
புதினாவோடு சேர்த்து குடித்து வந்தால் நல்ல செரிமானம் மற்றும் வாய் நாற்றததைப் போக்கும். மேலும், சுறுசுறுப்பை அதிகரிக்கும். இஞ்சியுடன் துளசி சாறை  கலந்து குடித்தால் வாய்வுத்தொல்லை நீங்கும்.
 
கொதிக்க வைத்த இஞ்சி சாறை கொப்புளித்து வந்தால் பல் கூச்சத்தில் இருந்து விடுபடலாம். விடாத இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறை கலந்து குடித்தால் வாந்தி மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபடலாம்.
 
குழந்தைகளுக்கு இஞ்சி சாறை எடுத்து வயிற்றில் தேய்த்தால் நல்ல செரிமானத்தை தரும். இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தொல்லை  நீங்கும்.
 
பாலில் கலந்து குடித்தால் வியிற்று வலியை குறைக்கும் சக்தி உடையது. மேலும், குண்டாக இருப்பவர்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் கொடுக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்