காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்! இரு குழந்தைகள் உயிரிழப்பு

20 புரட்டாசி 2025 சனி 17:51 | பார்வைகள் : 175
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், 18-09-2025 நேற்று முன்தினம் 43 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் காசாவில் தனது முக்கிய நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து காசா நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 450,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசா மிக மோசமான உயிரிழப்புகள் மற்றும் அழிவை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.